search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோஷ்டி மோதல்"

    • மதுரையில் கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் மோதல் ஏற்பட்டது.
    • 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

    மதுரை

    மதுரை கூத்தியார்குண்டு பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. அங்கு திருவிழா நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவில் கமிட்டி சார்பில் சுப்பிரமணி என்பவர் நாடகம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதற்கு அந்த பகுதியில் வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது அழகு ராஜா (வயது 25) என்பவர் இரு தரப்பையும் சமரசம் செய்ய முயன்றார். அப்போது அவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதையடுத்து அழகு ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அழகுராஜா ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராமன் (53), அவரது மகன் சேதுராஜா, செல்வம் (38), அவரது சகோதரர் கார்த்திக், அழகு மனைவி பிச்சம்மாள் (59) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதே வழக்கில் கூத்தியார்குண்டு முத்துராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணபதி (25) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர கூத்தியார்குண்டு காளியம்மன் கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக கண்ணதாசன் (32), அவரது சகோதரர் அழகப்பன் (வயது 37) மற்றும் கண்ண தாசன் (32) அவரது சகோதரர் அழகப்பன் (37) மற்றும் ராமமூர்த்தி (42), பிரபு (35) ஆகிய 4 பேரிடம் ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவில் மகாபரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில் நேற்று ஒரு தரப்பினர் வண்டி வேசம் ஊர்வலமாக வந்தனர். அப்போது அங்கிருந்த வாகனங்கள் மீது கல் வீசி தாக்கப்பட்டது.

    இதனால் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டதில் திருவிழாவில் பங்கேற்ற ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. அவ்வழியாக வந்த அரசு பஸ் கல் வீசி தாக்கப்பட்டதால் குள்ளபுரம், ஏ.வாடிப்பட்டி பகுதியில் இருந்து வத்தலக்குண்டு நகருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த தண்ணீர் பந்தலுக்கும் தீ வைத்து எரித்தனர். இதனால் நேற்று சுவாமியின் முத்துப் பல்லக்கு ஊர்வலம் சிறிது நேரத்தில் முடிந்தது. இன்று தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொடைக்கானலில் முதல்வர் பாதுகாப்புக்கு பெரும்பாலான போலீசார் சென்று விட்டதால் குறைந்த அளவு போலீசாரே உள்ளனர். எனவே இன்று மீண்டும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை சமாளிக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×